மன
அழுத்தம் (Stress)
கடந்த
ஒரு வாரமா எனக்கு சரியா
பசிக்கறது இல்லை.
சாப்பிடாட்டியும்
சோர்வடையலை.
நல்லா
தூக்கமும் வருது.
சாப்பிடாலும்
வயிறு எரிச்சலோ அசௌகரியமோ
இல்லை.
எதுக்கும்
டாக்டர் கிட்ட கேக்கலாம்னு
என் மனைவி சொன்னதால டாக்டரை
பார்க்கப் போனோம்.
அவரும்
என்னோட ரத்த அழுத்தம் இதயத்
துடிப்பு எல்லாம் பாத்துட்டு
உடம்புல ஒரு பிரச்சனையும்
இல்லை வீட்ல ஏதும் பிரச்சனையான்னார்.
நா
என் மனைவிய பாத்துட்டே
இல்லைனு சொன்னேன்.
அப்ப
உங்க வேலைல?
வேலை
கொஞ்சம் அதிகம் ஆனா பிரச்சனையெல்லாம்
கிடையாதுன்னு சொன்னேன்.
மன
அழுத்தம் கூட பசியிண்மைக்கு
காரணமா இருக்கலாம்.
இந்த
வார விடுமுறைல ஏதாவது கோயிலுக்கு
போயிட்டு வாங்கன்னு சொன்னார்.
மன
அழுத்தம் சாதாரணமா எல்லாருக்கும்
இருக்கிறது.
எல்லா
மன அழுத்தங்களும் ஆபத்தானவை
அல்ல.
மன
அழுத்தம் நம்மை சில ஆபத்தான
தருணங்களில் இருந்து காப்பற்றும்
உந்து சக்தியாகவும் இருக்கிறது.
மன
அழுத்தம் 3
வகைப்படும்.
கடுமையான மன
அழுத்தம் (Acute
Stress)
அடிக்கடி
வரும் வந்து போகும் மன அழுத்தம்
(Episodic
Acute Stress)
நாட்பட்ட மன
அழுத்தம் (Chronic
Stress)
கடுமையான
மன அழுத்தம்.
(Acute
Stress)
நாம
நம்ம எதிர்காலத்தை பற்றி
நினைக்கும் போது,
முக்கியமான
வேலையா போகும் போது வண்டி
பஞ்சரானா,
எங்க
மிஸ் உங்கள நாளைக்கு வரச்சொன்னாங்க
னு பாப்பா சொல்லரப்ப,
சரக்கு
வாங்க போனவன் வர நேரமாகும்
போது இப்படி பல காரணங்கள
சொலல்லலாம்.
இந்த
அழுத்தம் கொஞ்ச நேரத்துக்கு
மட்டும் இருக்கும்.
இதனால
பெரிய பாதிப்பில்லை.
கோவப்படுவோம்,
தல
வலி வரும்,
கைகாலெல்லம்
வியர்கும்,
இதயத்
துடிப்பு அதிகமாகும்
நெஞ்செரிச்சல், வாய்வு, வயிற்று
போக்கு,
மலச்சிக்கல்,
மற்றும்
பசியின்மை
போன்றவை ஏற்படும்
இது
எல்லோர்கும் எப்ப வேணா வரும்
சுலபமா சமாளிக்க முடியும்.
அடிக்கடி
வரும் மன அழுத்தம் (Episodic
Acute Stress)
"அகலக்கால்
வெக்காதே"
ன்னு
எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க.
"கடன்பட்டார்
நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்"
வரவை
விட செலவு அதிகம் செய்பவர்களுக்கு
இந்த வகை மன அழுத்தம் கண்டிப்பாக
வரும்.
மாதத்
தொடக்கத்தில் சந்தோசமாகவும்
15
நாளைக்கப்றம்
சோகமா இருப்பாங்க.
இவங்க
வாழ்கை முறை ஒழுங்கற்றதாக
இருக்கும்.
எப்போதும்
பரபரப்பா இருப்பாங்க ஆனா
எந்த வேலையும் உருப்படியா
செய்ய மாட்டாங்க.
இவங்க
கண்டிப்பா யோகா மற்றும்
தியானம் செய்யறது ரொம்ப
நல்லது.
இல்லட்டி
அடுத்த வகைக்குள்ள சீக்கிரமா
வந்துடுவாங்க.
நாட்பட்ட மன
அழுத்தம் (Chronic
Stress)
சின்ன
வயசுல ஏற்பட்ட மோசமான நிகழ்வுகள்
விரும்பிய,
ஒருவரோட
இழப்பு ஆகியவற்றால் இந்த வகை
மன அழுத்தம் ஏற்படும்.
திருமண
வாழ்வில் மகிழ்ச்சி இன்மை,
பிடிக்காத
வேலையை நிர்பந்தம் காரணமாக
செய்வது போன்றவையாலும்
ஏற்படலாம்.
இவங்க
கண்டிப்பா மன நல மருத்துவரை
அணுகி ஆலோசனை கேட்டு முறையா
செயல்படுத்தினா தப்பிக்கலாம்.
இல்லைனா
![]() |
| வலம்புரி |
இந்த
முகவரியில் உங்களோட மன அழுத்தம்
எவ்வளவுனு தெரிஞ்சுக்கலாம்.
