ஆரோக்கியத்தை தேடி

வாருங்கள் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்...

புதன், 21 மார்ச், 2012

இயற்கை மருத்துவம் . . .



வெளிச்சி . . . .  

நேற்று (20.03.2012) இரவு சுமார் 12.30 மணிக்கு, எங்க பாப்பாவுக்கு காது வலி வந்து வலியால துடிச்சுட்டாங்க. காதுல டார்ச் அடிச்சு பாத்தா காதுக்குள்ள அழுக்கில்லாம சுத்தமா இருக்கு. பதட்டத்துல என்ன செய்யரதுன்னு தெரியலை. சின்ன வயசில எனக்கும் இந்த மாதிரி காது வலி வரும். அப்ப எங்க அம்மா செய்த மருத்துவம் ஞாபகம் வந்துச்சு.  

கிராமத்துல எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கும் "பால் பாச்சான்" மரத்தில இருந்து, பழுத்த இலைய கொண்டு வந்து நெருப்புல வாட்டி அதிலிருந்து வரும் எண்ணைய காதுல விடுவாங்க. உடனே வலி நின்றும். ஆனா கோயமுத்தூர்ல, ராத்திரி 1 மணிக்கு நான் எங்க போயி அந்த மரத்தை தேடறது. என் மனைவி, வாங்க உடனே டாக்டர்கிட்ட போலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்றாங்க. அமைதியா இருமா, பயப்படதேன்னு சொல்லிட்டு எங்க அம்மாக்கு போன் பண்ணி என்ன செய்யறதுன்னு கேட்டேன்.

அம்மா சொன்னாங்க, "கண்ணு கொஞ்சமா தேங்கா எண்ணையை வாணலில எடுத்து அதுல ஒரு பூண்டை கிள்ளிப் போட்டு மிதமா சூடு செஞ்சு, கை தாங்கற சூட்டல அந்த எண்ணைய காதுல இரண்டு சொட்டு விடு" ன்னு சொன்னாங்க. இந்த மாதிரி காது வலிக்கு பேரு "வெளிச்சி" ன்னு சொன்னாங்க.

அம்மா சொன்ன மாதிரி செஞ்ச உடனே பாப்பாக்கு காது வலி போயிருச்சு. ஒரு 5 நிமிசத்தில சகஜமாயிட்டாங்க. 

நாங்க மட்டும் உடனடியா மருத்துவமனைக்கு போயிருந்தோம் பாப்பாவுக்கு ஒரு 10 டெஸ்ட் எடுத்து, நமக்கு BP ஏத்தி . . .?

கிராமதில யாரும் அவ்வளவு சீக்கிரமா மருத்துவமனைக்கு போறதில்லை. அவங்க உடம்புக்கு என்ன வந்தாலும் அதற்கான வைத்தியம் தெரிஞ்சு வச்சிருந்தாங்க.

மேல நான் சொன்ன பாச்சா மரத்தை விக்கிபீடியா கொடிக்கள்ளின்னு சொல்லுது.




அந்த மரம் இன்னோரு வலியையும் போக்கும் தன்மை கொண்டது. குளிர் காலம் ஆரம்பிக்கும் போது அநேகமா எல்லோர்க்கும் தொண்டை வலி (Throat Infection) வரும்.

கிராமத்தில இத சிறுநாக்கு வளந்திருச்சுன்னு (Tonsil) சொல்லுவாங்க. அதற்கும் இந்த மரத்தோட பாலை எடுத்து தொண்டைக் குழியில வச்சா இரண்டே நாள்ள சரியாயிடும்.

ஆனா சரியான இடத்தில வைக்கலினா அந்த இடம் புண்ணாகிவிடும். சில பத்தியங்களும் (Diet) இருக்கு.

அந்த காலத்தில நவீன கருவிகள் ஏதுமில்லாம ஐந்தாறு குழந்தைகளை சுகமா பிரசவித்து ஆரோக்யமா வளத்தாங்க. நாடி பாத்தே கருவில் வளரும் குழந்தை எப்படி இருக்கு, எப்ப பிறக்கும்னு சொல்லிடுவங்க.

இப்போ நாம அதி நவீன கருவிகளைக் கொண்டு, கருவில் வளரும் குழந்தைக்கு ஜாதகம் கணித்து, பள்ளிக் கூடத்தில அட்மிசன் முதற்கொண்டு வாங்கிட்டு அப்பறமா பிறக்க அனுமதிக்கிறோம். 

"எதிர்காலம் என்னானு முன்னாடியே தெரிஞ்சிருச்சுனா வாழ்கிற காலம் நரகம்" னு சொல்லுவாங்க.
  
ஆனா நாம நரகத்தை நோக்கி சந்தோசமா, வேகமா ஓடிட்டு இருக்கோம் !

வெள்ளி, 16 மார்ச், 2012

குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது?



நகைச்சுவை

எப்பப் பாத்தாலும் ஒரு சின்ன பைய நகத்த கடிச்சுட்டே இருந்தான். அவனோட அப்பா அவனை திட்டிப் பாத்தாரு அடிச்சு பாத்தாரு . ம்ம் பயபுள்ள திருந்தரதா இல்ல. அதனால அவன பயப்படுத்த, "டே தம்பி நகத்த கடிச்சீனா அதுல இருக்கிற அழுக்கெல்லா வயித்துக்குள்ள போயி வயிறு வீங்கி வெடிச்சுருன்னு" சொன்னாரு

அதோட பயபுள்ள அந்த பழக்த்தையே விட்டுட்டான்.

அப்பா நிம்மதியா இருந்தாரு.

ஒரு நா அப்பனும் புள்ளையும் பஸ்க்கு நின்னுட்டு இருந்தப்ப ஒரு புள்ளத்தாச்சி அங்க வந்து நின்னுச்சு.

பய புள்ள அந்த அம்மாவை மேல இருந்து கீழ வரை பாக்கரான் சிரிக்கிரான்.

அந்த அம்மாவுக்கு சங்கடமா போச்சு. மெல்ல அவங்கிட்ட போயி "ஏந்தம்பி இப்பிடி பாக்கரே"னு கேட்டாங்க

அதுக்கு அந்த பயபுள்ள அவங்க வயத்தை காட்டி

"இது உங்களுக்கு எப்படி வந்துச்சுனு எனக்குத் தெரியுமே. எங்கப்பா சொல்லிருக்காரே" ன்னு சொல்லிட்டு மறுபடியும்  சிரிச்சான்.

அதோட அவங்க அப்பா நிம்மதி போச்சு.

வியாழன், 15 மார்ச், 2012

ஆரோக்ய வாழ்வு


மனித உடற்கூறு
 
மனித உடலானது, தண்ணீர், கார்போஹைட்ரேட்கள் (சர்க்கரை, பச்சையம் மற்றும் நார் சத்து), அமினோ அமிலங்கள் (புரதங்களில் உள்ளவை), கொழுப்பு அமிலங்கள் (கொழுப்புக்களில் உள்ளவை), மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் (டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ) போன்ற ரசாயனக் கலவைகளை கொண்டிருக்கிறது.

இந்தக் கலவைகள் ஒரே வரிசையில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மேக்னீசியம், மாங்கனிஸ், மற்றும் இன்னபிற போன்ற மூலக்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.

இந்த ரசாயனக் கலவைகள் மற்றும் மூலக்கூறுகள் அனைத்தும் மனித உடலில் இருந்தும், மனிதர்கள் உண்ணும் தாவரம் மற்றும் விலங்கு உறுப்புகளிலிருந்தும் பல்வேறு வடிவங்கள் மற்றும் கலவைகளில் கிடைக்கின்றன.

வளர்சிதை மாற்றம்

நமது உடலானது தினமும் பல்லாயிரக்கணக்காண செல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மற்றும் வயதான (அ) இறந்து போன செல்களை நீக்கி உடலை பொலிவாக வைக்கிறது. குறிப்பிட்ட வயதுக்குப்பின் இந்த மாற்றம் நடைபெருவது மந்தமாகிறது (அ) நின்று விடுகிறது. இதனால் நமக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாற்றங்கள் நிகழும் போது ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் கலவை உருவாக வாய்ப்பிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஆக்ஸிடைசர்கள் (அதாவது, எலக்ட்ரான்களை ஏற்பவை) என்பதோடு சில மிகவும் வலுவாக எதிர்வினையாற்றுகின்றன.
இந்த ஃப்ரீ ரேடிகல்ஸ் ஒன்றிணைந்து உடலுக்குள் தேவையற்ற கட்டியாக வளர்ந்து கேன்சரை உருவாக்குகிறது.


நியூட்ரிலைட் பார்சிலேனியம் - ஈ

இது இரண்டு அத்தியாவசியமான எதிர்ப்பு ஊட்டச்சத்துக்களான 400 UI வைட்டமின் ஈ மற்றும் 10 மைக்ரோ கிராம் செலேனியம் ஆகியவற்றின் கலவையுடன் கிருமித்தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றலை நம் செல்களுக்கு அளிக்கிறது.

இந்த கலவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் அனைத்தையும் வெளியேற்றுவதுடன் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.

இன்றைக்கு நிலவும் சுற்றுச் சூழலில் அனைவருக்கும் இந்த ஊட்டச்சத்து மிக அவசியமாகிறது.

வயதான தோற்றம், புற்று நோய், இதய அடைப்பு நோய், ஆஸ்த்மா மற்றும் T.B. போன்ற நோய்களின் வீரியத்தை குறைக்க இந்த மாத்திரைகள் உதவுகிறது.

இறப்பை நம்மால் தடுக்க முடியாது ! 
ஆனால் வாழும் வரை ஆரோக்யமாக வாழ்வோமே . . .


செவ்வாய், 13 மார்ச், 2012

கேன்சர்



யுவராஜ் சிங்கிற்க்கு கேன்சர்

ஆச்சர்யம் ஆனால் உண்மை. ஒரு கிரிக்கெட் வீரருக்கு எப்படி கேன்சர் வரும்? தினமும் உடற்பயிற்சியும் சரியான உணவுப் பழக்கமும் கொண்ட அவருக்கே வரும் என்றால் நமக்கு ஏன் வராது?

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது.சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

 

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
  • புகையிலை மற்றும் மது பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • ஹீமோகுளோபின் அதிகமள்ள பேரீச்சை சாப்பிடலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • நியூட்ரிலைட்® போன்ற இயற்கையான விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
நியூட்ரிலைட் ® பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 94420 14985.

 

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
  • குணப்படாத புண்கள்.
  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
  • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
  • பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி.

நியூட்ரிலைட் ® எப்படி உதவும்?
அடுத்த பதிவில்  . . . .