ஆரோக்கியத்தை தேடி

வாருங்கள் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்...

வெள்ளி, 16 மார்ச், 2012

குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது?



நகைச்சுவை

எப்பப் பாத்தாலும் ஒரு சின்ன பைய நகத்த கடிச்சுட்டே இருந்தான். அவனோட அப்பா அவனை திட்டிப் பாத்தாரு அடிச்சு பாத்தாரு . ம்ம் பயபுள்ள திருந்தரதா இல்ல. அதனால அவன பயப்படுத்த, "டே தம்பி நகத்த கடிச்சீனா அதுல இருக்கிற அழுக்கெல்லா வயித்துக்குள்ள போயி வயிறு வீங்கி வெடிச்சுருன்னு" சொன்னாரு

அதோட பயபுள்ள அந்த பழக்த்தையே விட்டுட்டான்.

அப்பா நிம்மதியா இருந்தாரு.

ஒரு நா அப்பனும் புள்ளையும் பஸ்க்கு நின்னுட்டு இருந்தப்ப ஒரு புள்ளத்தாச்சி அங்க வந்து நின்னுச்சு.

பய புள்ள அந்த அம்மாவை மேல இருந்து கீழ வரை பாக்கரான் சிரிக்கிரான்.

அந்த அம்மாவுக்கு சங்கடமா போச்சு. மெல்ல அவங்கிட்ட போயி "ஏந்தம்பி இப்பிடி பாக்கரே"னு கேட்டாங்க

அதுக்கு அந்த பயபுள்ள அவங்க வயத்தை காட்டி

"இது உங்களுக்கு எப்படி வந்துச்சுனு எனக்குத் தெரியுமே. எங்கப்பா சொல்லிருக்காரே" ன்னு சொல்லிட்டு மறுபடியும்  சிரிச்சான்.

அதோட அவங்க அப்பா நிம்மதி போச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக