ஆரோக்கியத்தை தேடி

வாருங்கள் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவோம்...

புதன், 21 மார்ச், 2012

இயற்கை மருத்துவம் . . .



வெளிச்சி . . . .  

நேற்று (20.03.2012) இரவு சுமார் 12.30 மணிக்கு, எங்க பாப்பாவுக்கு காது வலி வந்து வலியால துடிச்சுட்டாங்க. காதுல டார்ச் அடிச்சு பாத்தா காதுக்குள்ள அழுக்கில்லாம சுத்தமா இருக்கு. பதட்டத்துல என்ன செய்யரதுன்னு தெரியலை. சின்ன வயசில எனக்கும் இந்த மாதிரி காது வலி வரும். அப்ப எங்க அம்மா செய்த மருத்துவம் ஞாபகம் வந்துச்சு.  

கிராமத்துல எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கும் "பால் பாச்சான்" மரத்தில இருந்து, பழுத்த இலைய கொண்டு வந்து நெருப்புல வாட்டி அதிலிருந்து வரும் எண்ணைய காதுல விடுவாங்க. உடனே வலி நின்றும். ஆனா கோயமுத்தூர்ல, ராத்திரி 1 மணிக்கு நான் எங்க போயி அந்த மரத்தை தேடறது. என் மனைவி, வாங்க உடனே டாக்டர்கிட்ட போலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்றாங்க. அமைதியா இருமா, பயப்படதேன்னு சொல்லிட்டு எங்க அம்மாக்கு போன் பண்ணி என்ன செய்யறதுன்னு கேட்டேன்.

அம்மா சொன்னாங்க, "கண்ணு கொஞ்சமா தேங்கா எண்ணையை வாணலில எடுத்து அதுல ஒரு பூண்டை கிள்ளிப் போட்டு மிதமா சூடு செஞ்சு, கை தாங்கற சூட்டல அந்த எண்ணைய காதுல இரண்டு சொட்டு விடு" ன்னு சொன்னாங்க. இந்த மாதிரி காது வலிக்கு பேரு "வெளிச்சி" ன்னு சொன்னாங்க.

அம்மா சொன்ன மாதிரி செஞ்ச உடனே பாப்பாக்கு காது வலி போயிருச்சு. ஒரு 5 நிமிசத்தில சகஜமாயிட்டாங்க. 

நாங்க மட்டும் உடனடியா மருத்துவமனைக்கு போயிருந்தோம் பாப்பாவுக்கு ஒரு 10 டெஸ்ட் எடுத்து, நமக்கு BP ஏத்தி . . .?

கிராமதில யாரும் அவ்வளவு சீக்கிரமா மருத்துவமனைக்கு போறதில்லை. அவங்க உடம்புக்கு என்ன வந்தாலும் அதற்கான வைத்தியம் தெரிஞ்சு வச்சிருந்தாங்க.

மேல நான் சொன்ன பாச்சா மரத்தை விக்கிபீடியா கொடிக்கள்ளின்னு சொல்லுது.




அந்த மரம் இன்னோரு வலியையும் போக்கும் தன்மை கொண்டது. குளிர் காலம் ஆரம்பிக்கும் போது அநேகமா எல்லோர்க்கும் தொண்டை வலி (Throat Infection) வரும்.

கிராமத்தில இத சிறுநாக்கு வளந்திருச்சுன்னு (Tonsil) சொல்லுவாங்க. அதற்கும் இந்த மரத்தோட பாலை எடுத்து தொண்டைக் குழியில வச்சா இரண்டே நாள்ள சரியாயிடும்.

ஆனா சரியான இடத்தில வைக்கலினா அந்த இடம் புண்ணாகிவிடும். சில பத்தியங்களும் (Diet) இருக்கு.

அந்த காலத்தில நவீன கருவிகள் ஏதுமில்லாம ஐந்தாறு குழந்தைகளை சுகமா பிரசவித்து ஆரோக்யமா வளத்தாங்க. நாடி பாத்தே கருவில் வளரும் குழந்தை எப்படி இருக்கு, எப்ப பிறக்கும்னு சொல்லிடுவங்க.

இப்போ நாம அதி நவீன கருவிகளைக் கொண்டு, கருவில் வளரும் குழந்தைக்கு ஜாதகம் கணித்து, பள்ளிக் கூடத்தில அட்மிசன் முதற்கொண்டு வாங்கிட்டு அப்பறமா பிறக்க அனுமதிக்கிறோம். 

"எதிர்காலம் என்னானு முன்னாடியே தெரிஞ்சிருச்சுனா வாழ்கிற காலம் நரகம்" னு சொல்லுவாங்க.
  
ஆனா நாம நரகத்தை நோக்கி சந்தோசமா, வேகமா ஓடிட்டு இருக்கோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக